தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? நிதியமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? நிதியமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? நிதியமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? நிதியமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல மாதங்களாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் எல்லாருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்கினால் அரசு திவாலாகிவிடும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டம்:

2021-22 ஆம் நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் விவாதம் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டு 3 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் இந்த சட்டப்பேரவை விவாதம் முடிவடைந்த நிலையில், அதில் பேசிய நிதித்துறை அமைச்சர் கூறுகையில், திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றி முதல்வர் எல்லாருக்கும் எல்லாம் என தெரிவித்தார். ஆனால் எல்லாருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது. அப்படி செய்தால் அரசு திவாலாகிவிடும். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அப்படி எல்லாரும் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம் என நடந்துள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு – 70 லட்சம் பேர் காத்திருப்பு, ஷாக் ரிப்போர்ட்!

ஆனால் இந்த ஆட்சியில் அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை. இதற்காக 5 திருத்தங்களை சுட்டிக் காட்டியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் எத்தனை அறிவிப்புகள் வந்தது. அதில் எத்தனை செயல்படுத்தப்பட்டன. மேலும் எத்தனை கைவிடப்பட்டன. நிதி பெற்ற விவரங்கள், பட்ஜெட்டுக்கு உட்படாத நிதி எங்கிருந்து வந்தது. திட்டமிடப்படாத அறிவிப்புகள் அரசை எவ்வாறு பாதிக்கின்றன என பல்வேறு தரப்பில் இருந்து ஆய்வுகள் செய்யப்படுவதாக தெரிவித்தார். அவ்வாறு ஆய்வு செய்த அறிக்கை இந்த கூட்டத் தொடரிலேயே சமர்ப்பிக்கப்படும். இன்னும் பல துறைகளில் பல காரணங்களுக்கான பல ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் குறையும் நீட் தேர்வு விண்ணப்பங்கள் – மாணவர்களின் எண்ணிக்கை சரிவு!

இதை எதிர்க்கட்சியை பழிவாங்க செய்யவில்லை. நாட்டின் நிதிநிலை இக்கட்டான நிலையில் உள்ளது. அரசின் இந்த சூழ்நிலையில் தற்போது இருக்கும் அளவை விட சிறப்பாக குடிநீர், சாலை, மருத்துவமனை வீடுகள் ஆகியவற்றை அமைத்து தர முடியாது. எனவே இன்று இந்த சூழலை திருத்தி தர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மத்திய அரசின் நிதி என ரூ.4 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு தேவையற்ற எல்லா செலவுகளையும் ஒத்திவைக்க உள்ளது. சில செலவுகள் பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படுகிறது. பொருள்கள் விலை அதிகரிப்பால் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பின் போது ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் விதவைகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படுவது இல்லை வரியும் உயர்த்தப்படுவது இல்லை. இதை மாற்றியாக வேண்டும் என அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!