அண்ணாமலை பல்கலையில் 1,390 பேருக்கான பணிநிரவல் குறித்த அதிரடி உத்தரவு – வாபஸ் பெற கோரிக்கை!!

0
அண்ணாமலை பல்கலையில் 1,390 பேருக்கான பணிநிரவல் குறித்த அதிரடி உத்தரவு - வாபஸ் பெற கோரிக்கை!!
அண்ணாமலை பல்கலையில் 1,390 பேருக்கான பணிநிரவல் குறித்த அதிரடி உத்தரவு - வாபஸ் பெற கோரிக்கை!!
அண்ணாமலை பல்கலையில் 1,390 பேருக்கான பணிநிரவல் குறித்த அதிரடி உத்தரவு – வாபஸ் பெற கோரிக்கை!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருந்த 1,390 பணியாளர்கள், பல்வேறு துறைகளுக்கு பணிநிரவல் செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பணிநிரவல்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என ஏராளமானோர், கூடுதலாக பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால், தாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்

புதிய வரி முறைக்கு நீங்களும் மாறலாம் – வரிகள் வாரியத்தின் தலைவர் வெளியிட்ட கருத்து!!!

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில், தற்போது மேலும் 1,390 பணியாளர்களை பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் உதவியாளர், கண்காணிப்பாளர், பிரிவு அலுவலர், இளநிலை உதவியாளர்கள் என 1,023 பேர் ஆசிரியரல்லா பணியாளர்கள் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முன்பு ஆசிரியரல்லா பணியாளர்கள் போராட்ட களத்தில் இறங்கினர்.

மேலும் இது தொடர்பாக ஆசிரியரல்லா பணியாளர்கள் தெரிவித்துள்ளதாவது, இந்த பணி நிரவல் காரணமாக பலர் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இதேபோல், இடமாறுதலுக்காக காத்திருந்தவர்களின் வாய்ப்பும் பறிக்கப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் பணி நிரவல் காரணமாக பல ஆண்டுகளாக பதவி உயர்வு, இடமாறுதலுக்காக காத்திருந்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். அதனால் பணிநிரவல் செய்வதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!