அண்ணா பல்கலை UG, PG செமஸ்டர் தேர்வு முடிவுகள் – வெளியீடு!

0
அண்ணா பல்கலை UG, PG செமஸ்டர் தேர்வு முடிவுகள் - வெளியீடு!
அண்ணா பல்கலை UG, PG செமஸ்டர் தேர்வு முடிவுகள் - வெளியீடு!
அண்ணா பல்கலை UG, PG செமஸ்டர் தேர்வு முடிவுகள் – வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற முதுநிலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) காலை பல்கலையின் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டது. அதே போல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் வழியாகவே பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சிறப்பு மருத்துவம் படித்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் – என்ன காரணம்?

இதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னதாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த ஆன்லைன் தேர்வுகளில் பல மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அம்மாணவர்களது தேர்ச்சி முடிவுகளை பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருந்தது. இதையடுத்து அம்மாணவர்களுக்கு மீண்டுமாக தேர்வுகள் நடத்தப்படும் என பல்கலை நிர்வாகம் அறிவித்தது. இதனிடையே பல்கலைக்கழக முதுகலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான நவம்பர் மாத தேர்வுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு தொடக்க கல்வி பட்டயத்தேர்வு நுழைவுச் சீட்டு – வெளியீடு!

இந்த தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) காலை அண்ணா பல்கலையின் அதிகார்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://auexams2.annauniv.edu/result/index.php அல்லது https://auexams3.annauniv.edu/result/index.php என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் பலரும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை காண முயற்சித்த போது இணையதளம் சிறிது நேரத்திற்கு முடக்கப்பட்டதாக பல்கலைக்கழக தேர்வுகள் கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!