அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் தேர்வு கால அட்டவணை 2021 | வெளியீடு!

0
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பர் தேர்வு கால அட்டவணை 2021 | வெளியீடு!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பர் தேர்வு கால அட்டவணை 2021 | வெளியீடு!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் தேர்வு கால அட்டவணை 2021 | வெளியீடு!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு குறித்த அட்டவணை பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (டிச.13) வெளியிடப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி துவங்கி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கல்லூரி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் டிச.15ம் தேதி உள்ளூர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நிர்வகித்து வரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை இன்று (டிச.13) வெளியிட்டிருக்கிறது. அதன் படி, சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும், திருச்சி, கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இப்போது அண்ணா பல்கலைக்கழத்தில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயின்று வரும் அனைத்து இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு கால அட்டவணை https://aucoe.annauniv.edu/timetable.php என்ற அண்ணா பல்கலைக்கழத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் செமஸ்டர் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here