அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு -பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

0

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு -பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow மற்றும் Technical Assistant பணிக்கென மொத்தம் 4பண்ணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் பொறியியல் படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Power electronics hardware and instrumentation துறையில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் GATE / NET தேர்வு தேர்ச்சி பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த கூடுதல் விவரங்களை Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here