தேர்வர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
தேர்வர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியீடு!
தேர்வர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியீடு!
தேர்வர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளை தற்போது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருவது அண்ணா பல்கலைக்கழகம். இதன் கீழ் பல கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது செமஸ்டர் தேர்வு முடிவுகளானது அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் தங்களின் Register Number மற்றும் Password-ஐ பயன்படுத்தி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!