அண்ணா பல்கலை மறுதேர்வுகள் ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியீடு!!

2
அண்ணா பல்கலை மறுதேர்வுகள் ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியீடு!!

அண்ணா பல்கலையை சேர்ந்த வளாக கல்லூரி மறுதேர்வுகள் மே மாதம் நடக்க இருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் முறையாக செயல்படவில்லை. நேரடி வகுப்புகள் நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரிகளில் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த திட்டமிடப்பட்டது.

தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை – ரூ.39,100 /- மாத ஊதியம்!

அதன்படி, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகியவற்றின் நவம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதம் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆன்லைன் தேர்விற்கு கல்லூரி நிர்வாகம் பலத்த கட்டுப்பாடுகளை விதித்தது. தேர்வின் போது ஒளி, ஒலி எழுப்பப்படக்கூடாது. தேர்வு சமயத்தில் மாணவரிடம் அசைவுகள் இருக்கக் கூடாது. அப்படி அசைவுகள் இருந்தால் மாணவர்கள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் பல மாணவர்களால் ஆன்லைன் தேர்வுகளை எழுத முடியவில்லை. இதனால் தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கு பல்கலை நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதன்படி, நவம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் மே 3ம் தேதி மீண்டும் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமடைந்து வருவதால் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகவும், மறுதேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here