இன்ஜினியரிங் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அண்ணா பல்கலை மாணவர்கள் புகார்!!

1
இன்ஜினியரிங் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் - அண்ணா பல்கலை மாணவர்கள் புகார்!!
இன்ஜினியரிங் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் - அண்ணா பல்கலை மாணவர்கள் புகார்!!
இன்ஜினியரிங் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் –
அண்ணா பல்கலை மாணவர்கள் புகார்!!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்:

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அரசு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன.

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!

கடந்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடத்த யுஜிசி உத்தரவிட்டது. இதன்படி டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கிய ஆன்லைன் வகுப்புகள் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை மட்டுமே நடைபெற்றதாக மாணவர்கள் சார்பாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் குறைந்து வரும் வேலையின்மை விகிதம் – முதல்வர் ட்வீட்!!

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,”அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முறையான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் எங்களால் வகுப்புகள் நடத்த முடியவில்லை “எனத் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்கள் சார்பில்,” அண்ணா பல்கலை கழக இணைப்பில் உள்ள தன்னாட்சி அல்லாத கல்லூரிகளில் மூன்று மற்றும் ஐந்தாம் செமஸ்டர் பாடங்கள் அனைத்தும் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் செய்முறை வகுப்புகள் குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை இதனால் நாங்கள் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்று வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக” தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!