நேரடி வகுப்புகள் ஜூன் மாதத்திற்கு பின்னரே தொடங்கும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

8
நேரடி வகுப்புகள் ஜூன் மாதத்திற்கு பின்னரே தொடங்கும் - அண்ணா பல்கலை அறிவிப்பு!!
நேரடி வகுப்புகள் ஜூன் மாதத்திற்கு பின்னரே தொடங்கும் - அண்ணா பல்கலை அறிவிப்பு!!
நேரடி வகுப்புகள் ஜூன் மாதத்திற்கு பின்னரே தொடங்கும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் நேரடி வகுப்புகள் ஜூன் மாதத்திற்கு பின்னரே தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மாணவர்களால் வர முடியாத நிலை, விடுதி பராமரிப்பு பணி போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகளும், வகுப்புகளும் எடுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளால் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செய்லபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து கல்லூரிகளின் வகுப்பறைகள், வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பிப்ரவரி 8ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கும், மார்ச் 15ம் தேதி 2ம் ஆண்டு மாணவர்களுக்கும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதியும் வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் முழுமையாக திறக்கப்படுவது உறுதியானது. மேலும் விடுதிகளும் பிப்ரவரி 8 முதல் செயல்பட தொடங்கும் என கூறப்பட்டிருந்தது.

UPSC தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!

தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள உத்தரவில், பொறியியல் நேரடி வகுப்புகள் ஜூன் மாதத்திற்கு பின்னரே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் பராமரிப்பு பணி மற்றும் வெளிநாட்டு மாணவர்களால் வர முடியாத சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!