ரூ.75,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.75,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.75,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.75,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் Business Manager பணிக்கு பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது விண்ணப்பிக்கும் முறை போன்ற இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள E-YUVA மையத்தில் Business Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. Business Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Business Incubation / Entrepreneurship Development போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Business Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு திறமை மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Presentation மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து The Chief Coordinator, E-YUVA Centre, Centre for Biotechnology, Anna University , Chennai – 600 025. என்ற முகவரிக்கு இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் (30.04.2022) மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் விரைவில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Anna University Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here