இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

0
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மே மாத செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் புதிய திருத்திய அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அத்துடன் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் நடத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி ஏற்கனவே 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான தேதி மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான கல்லூரிகள் திறப்பு தேதி உள்ளிட்டவற்றை ஏற்கனவே அறிவித்தது.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதன்படி முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு இந்த மாதம் 30ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை அண்ணா பல்கலை மாற்றி அறிவித்துள்ளது. அதாவது முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 11 ல் நடக்கும் என திருத்திய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!