இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் – தேதி அறிவிப்பு!!

0
இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் - தேதி அறிவிப்பு!!
இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் - தேதி அறிவிப்பு!!
இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் – தேதி அறிவிப்பு!!

இன்ஜினீரிங் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு மற்றும் இரண்டாம் செமஸ்டர் வகுப்புகளுக்கான தேதிகள் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் தான் செயல்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முறையில் நடைபெறும்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங் கூட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிறகு பல்கலைக்கழகத்தின் சார்பில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை அக்டோபர் மாதம் நடைபெற்றது.

2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!!

முதலாம் ஆண்டிற்கான வகுப்புகள் நவம்பரில் ஆரம்பித்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடக்கின்றன. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடம் மற்றும் தேர்வு குறித்த அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இன்ஜினீரிங் முழு நேர படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் பாடங்களை பிப்ரவரி 24க்குள் முடிக்க வேண்டும் எனவும், இந்த மாணவர்களுக்கான செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 26ல் தொடங்கும். மார்ச் 8ம் தேதி முதல் எழுத்துத் தேர்வுகள் தொடங்கும்.

ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!

பகுதி நேர பி.இ ., பி.டெக்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான படங்கள் மார்ச் 3ல் முடியும். செயல்முறை தேர்வுகள் மார்ச் 5 மற்றும் மார்ச் 15 முதல் எழுத்துத்தேர்வுகள் நடைபெறும். மேலும் முழு நேர மற்றும் பகுதி நேர மாணவர்களுக்கான இரண்டாம் செமஸ்டர் பாட வகுப்புகள் ஏப்ரல் 5ல் தொடங்கும்” என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!