அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 18% GST விதிப்பு!

0
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 18% GST விதிப்பு!
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 18% GST விதிப்பு!
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 18% GST விதிப்பு!

தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு நிர்வாகம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் 18% GST வரி விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாக பணிக்கு GST:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளன. தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும் அண்ணா பல்கலைக்கழகம் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே வகுப்புகளை இதுவரை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டு 2 & 3ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரிக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்தகைய அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், செமஸ்டர் தேர்வு நடத்தி விடைத்தாள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!

அதன் பின் GST வரிவிதிப்பு அமலுக்கு வந்ததும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு மட்டும் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை விரிவுபடுத்தி மாணவர்களுக்கு இடம்பெயர்வு சான்றிதழ் வழங்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், தொலைந்துபோன சான்றிதழ்களுக்கு மாறாக புதிய சான்றிதழ் வழங்குதல், விடைத்தாள் நகல் கோருதல் உள்ளிட்ட பணிகளுக்கு 18% GST வரி விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் வழக்கமான தேர்வுக்கட்டணம், மதிப்பெண் சான்றிதழ், மறுமதிப்பீடு, மறுகூட்டல் உள்ளிட்டவைகளுக்கு GST வரியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!