அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷாவை நினைத்து கவலைப்படும் கணவர்கள் – ரசிகர்கள் ஷாக்!

0
அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷாவை நினைத்து கவலைப்படும் கணவர்கள் - ரசிகர்கள் ஷாக்!
அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷாவை நினைத்து கவலைப்படும் கணவர்கள் - ரசிகர்கள் ஷாக்!
அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷாவை நினைத்து கவலைப்படும் கணவர்கள் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபலங்களும், பிரபலங்களின் கணவன்மார்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பிரபலங்களின் கணவர்களாக இருப்பதால் எந்தெந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பது குறித்தான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நீயா நானா:

சின்னத்திரை வட்டாரத்தில் பல கஷ்டங்களையும் தாண்டி வளர்ந்து நிற்கும் பெண்களாக அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளனர். சாதாரணமாக செய்தி வாசிப்பாளராக தனது வேலையை துவங்கியவர் தான் அனிதா சம்பத். பல கஷ்டங்களையும் தாண்டி தற்போது நல்ல நிலைமையில் இருந்து வருகிறார். தற்போது அனிதா சம்பத்திற்கு பல திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

Exams Daily Mobile App Download

அதே போல விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவும் மேடைப் பேச்சாளராக தனது பயணத்தை தொடர்ந்து கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலமாக பல நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி தற்போது நல்ல நிலைமையில் இருந்து வருகிறார். பல கஷ்டங்களுக்கு பிறகு அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவருக்குமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அறந்தாங்கி நிஷா மற்றும் அனிதா அனிதா சம்பத் இருவருமே தற்போது தனது கணவருடன் நீயா-நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதாவது பிரபலங்களின் கணவராக இருப்பதால் அந்த கணவன்மார்கள் படும் கஷ்டம் குறித்து பேசவுள்ளனர்.

செல்வம் தான் தீவிரவாதி, போலீசாரிடம் மாட்டிவிட்ட சந்தியா, சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ ரிலீஸ்!

அறந்தாங்கி நிஷாவின் கணவர் இது பற்றி கூறுகையில் சாதாரணமாக ஒரு டீக்கடையில் நின்று கூட டீ குடிக்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் இந்த டீக்கடையில் டீ குடிக்கிறீங்களா என மக்கள் ஏளனமாக பேசுகின்றனர். நானும் மனுஷன் தானே டீக்கடையில் நின்று டீ குடிப்பது தவறா என கூறுகிறார். இது மட்டுமல்லாமல் அனிதா சம்பத்தின் கணவரும் காதலிக்கும் போது அதிகமாக வண்டியில் தான் சுற்றிக் கொண்டு இருப்போம். ஆனால், தற்போது வண்டியில் வெளியே எங்குமே செல்ல முடிவதில்லை காரில்தான் முழுக்க முழுக்க செல்ல வேண்டியதாக இருக்கிறது என கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!