பிப்ரவரி 16 முதல் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு? அரசு நடவடிக்கை!

0
பிப்ரவரி 16 முதல் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு? அரசு நடவடிக்கை!
பிப்ரவரி 16 முதல் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு? அரசு நடவடிக்கை!
பிப்ரவரி 16 முதல் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு? அரசு நடவடிக்கை!

கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வந்ததையடுத்து மூடப்பட்ட அங்கன்வாடி மையங்களை பிப்ரவரி 16ம் தேதி முதல் மீண்டும் திறக்க ஒடிசா மாநில அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அங்கன்வாடி மையங்கள்

ஒடிசா மாநிலத்தில் கொரோனா 3ம் அலைத்தொற்று காரணமாக மூடப்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் சமீபத்தில் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா பரவலால் கடந்த 2020ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் மீண்டும் திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒடிசா அரசின் கூடுதல் செயலாளர் நித்யானந்தா பாரிக் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அங்கன் வாடிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பான் & ஆதார் கார்டு இணைப்பு!

இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களின் கட்டிடம் மற்றும் இதர உபகரணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பொறுப்பு அலுவலர்கள் மூலம் சரிபார்க்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பொறுப்பான அதிகாரிகளால் மையங்களின் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும் என்றும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கான தயார்நிலை குறித்த அறிக்கையை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

இப்போது இந்திய பொது சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படும் அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதார சேவையை வழங்குகின்றன. மேலும் இது 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குகிறது. இப்போது ஒடிசாவில் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடித்து 500 பேர் வரை கூடும் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here