ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!

0
ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!

ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் உபயோகிக்கும் ஆன்லைன் வங்கி செயல்பாடுகள் மூலம் அவர்களின் முக்கிய விவரங்களை திருட முயற்சிக்கும் ட்ரினிக் என்ற புதிய தீம்பொருள் குறித்து இந்திய கணினி அவசர பதில் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி எச்சரிக்கை

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் பலவும் பயனர்களின் தேவைகளை எளிதாக்குவது மட்டுமல்ல அவர்களுக்கு சில பிரச்சனைகளையும் அவ்வப்போது கொடுத்து வருகிறது. அதாவது பயனர்கள் ஆன்லைன் மூலம் ஏதாவதொரு சேவைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது மோசடி செய்பவர்களின் வலைகளில் விழுந்து விடுகின்றனர். இதன் மூலம் பெருமளவு பணத்தை வாடிக்கையாளர்கள் இழந்து விட நேரிடுகிறது. இப்படிப்பட்ட மோசடிகள் குறித்து அரசு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

நடப்பு ஆண்டிற்குள் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திட்டம்!

அதாவது வாடிக்கையாளர்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வரும், ட்ரினிக் என்ற புதிய வகையான மோசடி குறித்து இந்திய கணினி அவசர பதில் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தீம்பொருள் மோசடியானது, பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் உட்பட 27க்கும் மேற்பட்ட இந்திய வங்கிகளை குறிவைப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விவரங்கள் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் முதலாவதாக CERT-IN இன் ஆலோசனையின் படி, Drinik Android தீம்பொருள் இந்திய வங்கி பயனர்களை குறிவைக்கிறது. தவிர வருமான வரி திருப்பிச் செலுத்தும் முறை மூலம் இந்த மோசடிகள் நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு வங்கி ட்ரோஜன் ஆகும். மேலும் இது திரைகளை பிஷிங் செய்யும் திறன் கொண்டது. தவிர பயனர்களை முக்கியமான வங்கி தகவல்களை உள்ளிடச் செய்து அதன் மூலம் மோசடியை நிகழ்த்துகிறது. அதாவது பயனர்கள், முதலாவது வருமான வலைதளத்திற்கான இணைப்பை கொண்ட ஒரு SMS ஐ பெறுகிறார்கள்.

இப்போது வாடிக்கையாளர்கள் அந்த இணைப்பை திறக்கும் பட்சத்தில் மோசடி வலைக்குள் சிக்கி விடுவர். அந்த இணைப்பு வாடிக்கையாளர்களது பெயர், பான், ஆதார் எண், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கணக்கு எண், IFSC குறியீடு, CIF எண், டெபிட் கார்டு எண், காலாவதி தேதி, CVV மற்றும் பின் போன்ற வங்கி விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது. தொடர்ந்து பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படக்கூடிய வருமான வரி தொகை இருப்பதாக கூறி, தொகையை உள்ளிட கூறுகிறது. பின்னர் “டிரான்ஸ்ஃபர்” என்பதைக் கிளிக் செய்தால், அந்த வலைதளம் பிழையைக் காட்டும்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு – மாலை நிலவரம்!

இப்போது இது போலி வலைதளம் என நிரூபனமாகிறது. இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க, உங்கள் ஆண்ட்ராய்டு போனில் தெரியாத ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது. ஒரு பயன்பாட்டை நிறுவுவதற்கு முன், அதற்கான அனுமதிகளை சரிபார்க்கவும். மேலும் நம்பப்படாத வலைதளங்களை திறப்பது, இணைப்புகளை திறப்பது, தெரியாத தளங்களில் இருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் மற்றும் SMS களை கிளிக் செய்யும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!