WhatsApp புதிய அப்டேட் – ஆண்ட்ராய்டு மொபைல் டூ ஐபோன் Chat Migration!

0
WhatsApp புதிய அப்டேட் - ஆண்ட்ராய்டு மொபைல் டூ ஐபோன் Chat Migration!
WhatsApp புதிய அப்டேட் - ஆண்ட்ராய்டு மொபைல் டூ ஐபோன் Chat Migration!
WhatsApp புதிய அப்டேட் – ஆண்ட்ராய்டு மொபைல் டூ ஐபோன் Chat Migration!

உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ் அப் செயலி தனது சாம்சங் பயனர்களுக்கு சேட் இடம்பெயர்வு என்ற புதியதொரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பழைய iOS மற்றும் ஆண்ட்ராய்டு போனில் இருந்து சேட் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

புதிய அம்சம்

வாட்ஸ் அப் செயலி iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சேட் இடம்பெயர்வு அம்சத்தை (chat migration feature) முதன் முதலாக சாம்சங் தொலைபேசிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. இந்த இடம்பெயர்வு அம்சம் கடந்த மாதம் நடந்த சாம்சங் கேலக்ஸி வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், இந்த அம்சம் புதிய மடிக்கக்கூடிய தொலை பேசிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வாட்ஸ் அப் செயலி இப்போது பல சாம்சங் தொலைபேசிகளுக்கான சேட் பரிமாற்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இட ஒதுக்கீட்டில் சிலம்பம் இணைப்பு? விளையாட்டுத்துறை தகவல்!

இந்த புதிய அம்சத்தின் மூலம், வாட்ஸ் அப் பயனர்கள் தங்கள் தகவல், புகைப்படங்கள், தனிப்பட்ட சேட் கள், குரூப் சேட்கள், முந்தைய சேட்கள் ஆகியவற்றை ஐபோனிலிருந்து சாம்சங் கைபேசிக்கு மாற்றலாம். வாட்ஸ் அப்பின் சேட் இடம்பெயர்வு அம்சம் சாம்சங் ஸ்மார்ட்ஸ்விட்ச் செயலியின் 3.7.22.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு மேல் உள்ள சாம்சங் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியும். விரைவில் இந்த அம்சத்தை மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் விரிவுபடுத்துவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் தங்கள் பழைய ஐபோன் சாதனத்தில் வைத்திருந்த வாட்ஸ்அப் iOS 2.21.160.17 அல்லது வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு 2.21.16.20 பதிப்பை புதிய சாம்சங் போனிலும் வைத்திருக்க வேண்டும். மேலும் பழைய ஐபோனில் உள்ள அதே தொலைபேசி எண்ணையும் பயன்படுத்த வேண்டும. கூடுதலாக சாம்சங் போன் புதியதாக இருக்க வேண்டும். குறிப்பாக சாம்சங் பயனர்கள், இந்த அம்சத்தை செயல்படுத்த லைட்னிங் கேபிள் அல்லது USB டைப்-சி தேவைப்படும். இப்போது வாட்ஸ் அப் சேட்களை பழைய ஐபோனிலிருந்து சாம்சங் போனுக்கு மாற்ற:

  • சாம்சங் தொலைபேசியை ஆன் செய்து பழைய ஐபோனுடன் USB Type-C மூலம் லைட்னிங் கேபிளை இணைக்கவும்.
  • சாம்சங் ஸ்மார்ட் ஸ்விட்ச் படிகளை பின்பற்றவும்.
  • அறிவிப்பு தோன்றும் போது, உங்கள் ஐபோனின் கேமராவைப் பயன்படுத்தி புதிய சாம்சங் தொலைபேசியில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
  • ஐபோனில், Start என்பதை தேர்வு செய்யவும்.
  • இப்போது செயல்முறை முடிவடையும் வரை காத்திருக்கவும்.

IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் – ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!

  • புதிய சாம்சங் தொலைபேசியை தொடர்ந்து அமைக்கவும்.
  • Home screen வந்ததும், வாட்ஸ் அப் செயலியை திறந்து உங்கள் பழைய ஐபோனில்
  • நீங்கள் பயன்படுத்திய அதே தொலைபேசி எண்ணை வைத்து உள்நுழையவும்.
  • Import என்பதை கிளிக் செய்யவும்.
  • செயல்முறையை முடிந்ததும் உங்கள் புதிய தொலைபேசியை செயல்படுத்துவதை முடிக்கவும்.
  • பிறகு உங்கள் சேட்கள் அனைத்தும் புதிய சாதனத்தில் தோன்றும்.

உங்கள் பழைய ஐபோனில் இருக்கும் டேட்டாவை அழிக்கும் வரை அல்லது வாட்ஸ்அப் செயலியை நீக்கும் வரை அந்த டேட்டாக்கள் அனைத்தும் அப்படியே இருக்கும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!