14 பந்துகளில் அரைசதம், ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்ட்ரே ரசல் – IPL முன்னோட்ட விளாசல்!

0
14 பந்துகளில் அரைசதம், ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்ட்ரே ரசல் - IPL முன்னோட்ட விளாசல்!
14 பந்துகளில் அரைசதம், ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்ட்ரே ரசல் - IPL முன்னோட்ட விளாசல்!

14 பந்துகளில் அரைசதம், ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்ட்ரே ரசல் – IPL முன்னோட்ட விளாசல்!

தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தனது அதிவேக அரைசதத்தை அடித்துள்ளார் ஆண்ட்ரே ரசல். ஐபிஎல் போட்டிகளுக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்ட்ரே ரசல் அதிவேக அரைசதம்:

இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு தொடரான ஐபிஎல் போட்டிகளை போல மேற்கு இந்திய தீவுகளில் நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளாகும். இதன் ஜமைக்கா அணியில் அங்கம் வகிப்பவர் தான் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரசல். தற்போது நடைபெற்று வரும் அந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடைபெற்ற ஒரு போட்டியில் தனது அதிவேக அரைசதத்தினை பதிவு செய்துள்ளார்.

அஸ்வினுக்கு அணியில் இடம் இல்லாததற்கு இதுவே காரணம் – ஜாஹிர் கான் வெளிப்படையான கருத்து!

அதாவது, 14 பந்துகளில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்துள்ளார் அவர். இதற்கு முன்னர் 42 மற்றும் 40 பந்துகளில் அதிவேக சத்தினை அடித்தும் சாதனை படைத்து இருந்தார். இவர் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடாத காரணத்தினால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வந்தது.

பவுலர்களை பந்தாடும் பொல்லார்ட் – மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அதற்கு தனது பேட்டால் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வந்த ஐபில் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அத்தொடரின் ஏனைய போட்டிகள் வரும் செப் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அதில் கொல்கத்தா அணிக்காக களம் காணும் ரசல் இதே பணியில் வான வேடிக்கை காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் விண்டீஸ் வீரர் டேரன் சமி, உலக டி20 தொடரில் தொடரின் நாயகனாக, ஆண்ட்ரே ரசல் இருப்பார் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!