மேலும் ஒரு வாரம் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
மேலும் ஒரு வாரம் இரவு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
மேலும் ஒரு வாரம் இரவு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
மேலும் ஒரு வாரம் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன் படி இக்கட்டுப்பாடுகள் ஜூலை 27 வரை அமலில் இருக்கும்.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது வெகுவாக குறைந்திருக்கும் பட்சத்தில் முழு ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகளை ஆந்திர மாநில அரசு அறிவித்து வருகிறது. எனினும் தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆந்திர மாநில முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, இன்று (ஜூலை 20) முதல் இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

ஜூலை 27 வரை 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு!!

இந்த இரவுநேர ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான சுகாதாரத்துறை அமைச்சர் அல்லா நானி மற்றும் கொரோனா பணிக்குழு அதிகாரிகள் கலந்து கொண்ட மறு ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வந்தாலும், அதன் மூன்றாவது அலையை எதிர்க்க தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவானது தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்படும் எனவும் இந்த நேரங்களில் அனைத்து அத்தியாவசிய இயக்கம் மற்றும் நடவடிக்கைகள் தடைசெய்யப்படும் எனவும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!