விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவி முக்கிய சீரியலின் நடிகை மாற்றம் – ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா?

0
விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவி முக்கிய சீரியலின் நடிகை மாற்றம் - ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா?
விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவி முக்கிய சீரியலின் நடிகை மாற்றம் - ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா?
விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவி முக்கிய சீரியலின் நடிகை மாற்றம் – ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான அன்பே வா தொடரில் நடித்து வந்த நடிகை ஒருவர் மாற்றப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடிகை மாற்றம்:

சின்னத்திரை சீரியல்கள் தான் மக்களின் பொழுதுபோக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் சின்னத்திரை என்று எந்த வகையிலும் சொல்ல முடியாத அளவிற்கு சினிமாவை மிஞ்சும் கதை அம்சத்துடனும், அந்த கதையில் காதல், கோபம், அன்பு, தந்திரம் என்று அனைத்து தரப்பு அம்சங்களையும் கொண்டு வந்துள்ளனர். அந்த வகையில் சீரியல்களில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரிட் ஆன சன்டிவி சமீபத்தில் பல புதிய தொடர்களை ஆரம்பித்து அவை அனைத்தும் சிறப்பாக செல்கிறது. சில சமயங்களில், தவிர்க்க முடியாத காரணங்களினால் தொடர் ஆரம்பிக்கும் போது நடித்த நடிகர், நடிகைகள் இடையில் மாற்றப்படுவார்கள்.

நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படங்கள்!

அதே போல், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை தீபிகா மாற்றப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது, சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அன்பே வா தொடரில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா எடுக்கும் அன்பே வா தொடரில், பூமிகா என்ற கேரக்டரில் நடிகை டெல்னா டேவிஸ் ஹீரோயினாகவும், கர்நாடகாவை சேர்ந்த விராட், ஹீரோவாக வருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இது தவிர இன்னும் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – ‘டூ டூ டூ’ பாடல் வெளியீடு!

இந்த தொடரில், கதாநாயகியின் சகோதரி கதாபாத்திரத்தில் தீபிகாவாக நடிகை அக்ஷிதா அசோக் நடித்து வந்தார். தற்போது, அக்ஷிதா அசோக் அன்பே வா சீரியலில் இருந்து விலக்கப்பட்டு வேறு ஒருவர் நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை அக்ஷிதா அசோக் முன்னதாக சாக்லேட் சீரியலில், வைஷாலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. புதிய நடிகையை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here