அனல் பறக்கும் பீஸ்ட் படத்தின் ‘திரை தீ பிடிக்கும்’ பாடல் ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
அனல் பறக்கும் பீஸ்ட் படத்தின் 'திரை தீ பிடிக்கும்' பாடல் ரிலீஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
அனல் பறக்கும் பீஸ்ட் படத்தின் 'திரை தீ பிடிக்கும்' பாடல் ரிலீஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
அனல் பறக்கும் பீஸ்ட் படத்தின் ‘திரை தீ பிடிக்கும்’ பாடல் ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய்யின் பீஸ்ட் படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமடைந்து உள்ளனர்.

பீஸ்ட் மோடு:

வெள்ளித்திரையின் முடி சூடா மன்னராக இருந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் ‘பீஸ்ட்’. தளபதியின் 65 வது படமாக பீஸ்ட் வெளியாக உள்ளது. தளபதியின் ஒவ்வொரு படத்தையும் அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் மீது கொண்ட எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தான் இயக்கியுள்ளார்.

விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிரூத் இசையில் படம் உருவாகியுள்ளது. அப்போது அனிரூத் மற்றும் விஜய் காம்போ என்றாலே இசை படு பயங்கரமாக இருக்கும். அதிலும், தற்போது நெல்சன் இந்த கூட்டணியில் சேர்ந்துள்ளார். தனிப்பட்ட முறையில் அனிரூத் நெல்சன் கூட்டணியும் மெகா ஹிட் கூட்டணி தான். இதனால் படத்தில் மீதான ஆர்வம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் படத்தின் முதல் பாடல் அரபிக்குத்து வெளியானது. அடுத்தபடியாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ & ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு இடையே நடைபெற்ற மோதல் – ரசிகர்கள் உற்சாகம்!

இவை இரண்டுமே சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க செய்யும் அளவிற்கு பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. இதேபோல் கடந்த வாரம் வெளியான படத்தில் ட்ரைலர் பயங்கர மாஸாக இருந்தது. நெல்சனின் படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையான கடத்தலையே மையமாக கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தற்போது மால் ஹைஜாக்கிங் பற்றிய படம். இன்று படத்தின் 3 வது ட்ராக் மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. ‘திரை தீ பிடிக்கும்’ பாடல் அனிரூத் குரலில் மாஸாக உள்ளது. விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!