செப்.17 OTT இல் ரிலீஸாகும் ‘அனபெல் சேதுபதி’ – திகில் காமெடி கலந்த கதைக்களம்!

0
செப்.17 OTT இல் ரிலீஸாகும் 'அனபெல் சேதுபதி' - திகில் காமெடி கலந்த கதைக்களம்!
செப்.17 OTT இல் ரிலீஸாகும் 'அனபெல் சேதுபதி' - திகில் காமெடி கலந்த கதைக்களம்!
செப்.17 OTT இல் ரிலீஸாகும் ‘அனபெல் சேதுபதி’ – திகில் காமெடி கலந்த கதைக்களம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்துள்ள ‘அனபெல் சேதுபதி’ படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் ஒடிடியில் செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அனபெல் சேதுபதி:

தமிழில் முன்னணி நாயகனாக உள்ள விஜய் சேதுபதி தன் இயல்பான நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளார். அடுத்தடுத்த வெற்றி படங்களில் மக்கள் விரும்பும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. திரைப்படங்களில் ஹீரோ, வில்லன் என்று அனைத்து கேரக்டர்களிலும் அசத்தியுள்ளார். தொலைக்காட்சி பேட்டிகளில் எளிமையான பேச்சால் இளைஞர்களை கவர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவருக்கென தனி ரசிகர் பக்கங்கள் உள்ளது. தற்போது அடுத்தடுத்து இவரின் படங்கள் வெளியாக உள்ளது.

“பாரதி கண்ணம்மா” சமையல் அம்மா ரோஷினியா இது? ரசிகர்கள் பாராட்டு!

இவர் நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோயினாக நடிகை டாப்சி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ராதிகா, சேத்தன், தேவதர்ஷினி, ஜெகபதி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள இப்படம் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னே இப்பட பணிகள் தொடங்கி இறுதி கட்ட பணிகள் நடந்து வந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 17ம் தேதி ஓ.டி.டி-யில் அனபெல் சேதுபதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். காமெடி கதைக்களத்தை கொண்ட ‘அனபெல் சேதுபதி’ படம் பல மொழிகளில் வெளியாகிறது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் 9 ஆம் தேதி விஜய் சேதுபதியின் ’லாபம்’ படம் தியேட்டரிலும், செப்டம்பர் 10 ஆம் தேதி ‘துக்ளக் தர்பார்’ திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!