‘iPhone 13 வாங்க ஒரு சராசரி இந்தியன் 700 மணிநேரம் உழைக்கனும்’ – நம்ப முடியலையா? அதான் உண்மை!

0
'iPhone 13 வாங்க ஒரு சராசரி இந்தியன் 700 மணிநேரம் உழைக்கனும்' - நம்ப முடியலையா? அதான் உண்மை!
'iPhone 13 வாங்க ஒரு சராசரி இந்தியன் 700 மணிநேரம் உழைக்கனும்' - நம்ப முடியலையா? அதான் உண்மை!
‘iPhone 13 வாங்க ஒரு சராசரி இந்தியன் 700 மணிநேரம் உழைக்கனும்’ – நம்ப முடியலையா? அதான் உண்மை!

மனி சூப்பர் மார்க்கெட் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளின் படி, ஒரு சராசரி இந்தியன் ஆப்பிள் நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட iPhone 13 மாடலை வாங்க வேண்டும் என்றால் 700 மணிநேரம் உழைக்க வேண்டும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆம், உங்களால் நம்ப முடியா விட்டாலும் அதன் உண்மை. இது பற்றிய முழு விபரங்களை அறிய இப்பதிவை முழுமையாக படிங்க…

ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த iPhone 13 மாடல் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. ஆனால் இம்முறையாவது விலையை குறைத்து நடுத்தர பயனர்களும் வாங்கும் வகையில் iPhone இருக்கும் என்று பார்த்தால் மீண்டும் ஏமாற்றமே. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் போது சமூக வலைதளங்களில் கிட்னி காமெடிகள் வைரலாவது வழக்கமே. இதற்கு காரணம் அதன் விலை தான். இதை மேலும் சுவாரசியபடுத்தும் விதமாக ஒரு நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொண்டு உள்ளது.

தமிழகத்தில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? ஆய்வு குழு அமைப்பு! நடவடிக்கை தீவிரம்!

மனி சூப்பர் மார்க்கெட் நடத்திய ஆய்வில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஐபோனின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் ஐபோன் 13 (128 ஜிபி) மாடலை வாங்க யார்யார் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் இறக்குமதி வரிகள், நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஐபோன் விலைகள் மாறுபடும் என்பது நாம் அறிந்ததே. அதன்படி ஒரு சராசரி இந்தியன் ஒரு ஐபோன் வாங்குவதற்கு 724.2 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அதாவது சுமார் 30 நாட்கள் வேலை பார்க்க வேண்டும்.

Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு! கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!

இந்த பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதல் இடம், அதற்கடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. பிலிப்பைன்ஸில் 775.3 மணிநேரமாக உள்ளது. இதில் குறைந்தபட்ச வேலை நேரத்துடன் சுவிட்சர்லாந்து கடைசியாக உள்ளது. அங்கு 34.3 மணிநேரம் வேலையே போதுமானது. ஆச்சரியப்படும் விதமாக அமெரிக்கா, 49.5 மணிநேரத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நாடுகளில் குறைந்தபட்ச ஊதியம் இந்தியா அல்லது பிலிப்பைன்ஸை விட அதிகமாக இருப்பதாலும், குறைந்த இறக்குமதி வரிகள் ஆகியவற்றினால் ஐபோன் விலை குறைவாக உள்ளதுமே முக்கிய காரணமாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!