தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஊக்கப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனை மீட்டெடுக்க அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மாணவர்களுக்கு இது தொடர்பாக சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் பெரும்பாலும் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் கொள்கின்றனர். அதனால் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது பல்வேறு வகையான நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அரசு பள்ளிகளில் இன்னும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறமால் உள்ளது.
TN TET தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மாதிரி தேர்வு! முழு விபரங்கள் இதோ!
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கூறியதாவது, தமிழக அரசு பள்ளிகளில் 5 வயதிற்குட்பட்ட மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதுடன் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி ஒன்றை அனைத்து ஆசிரியர்களும் நடத்த வேண்டும். இது கோடை விடுமுறை முடிவதற்குள் நடத்தி முடித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அத்துடன் தமிழகத்தில் ஓரிலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய அப்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். அத்துடன் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதாவது அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.