குக் வித் கோமாளி’ ஷோவில் அம்முவின் கையை பிடித்த புகழை மிரட்டிய சக்தி – இதனால் தானா? ரசிகர்கள் ஷாக்!

0
குக் வித் கோமாளி' ஷோவில் அம்முவின் கையை பிடித்த புகழை மிரட்டிய சக்தி - இதனால் தானா? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி' ஷோவில் அம்முவின் கையை பிடித்த புகழை மிரட்டிய சக்தி - இதனால் தானா? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி’ ஷோவில் அம்முவின் கையை பிடித்த புகழை மிரட்டிய சக்தி – இதனால் தானா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் கோமாளியாக கலந்து கொண்டு வரும் புகழ், இந்த ஷோவில் அம்முவின் கையை பிடித்திருக்கும் போது சக்தி ஒரு வார்த்தை சொன்னதும் கையை விட்டு விடுவது போல இடம்பெற்றிருந்த சில காட்சிகள் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

குக் வித் கோமாளி

பொதுவாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழின் காமெடிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. குறிப்பாக புகழுக்காவே இந்த ஷோவை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் பலரும் கமெண்டுகளை அடித்து பேமஸ் ஆக புகழ் மட்டும் தனது முக பாவனைகள் மூலமாக மக்களால் ரசிக்கப்பட்டவர். இதனுடன் மற்ற கோமாளிகளுடன் புகழ் அடிக்கும் கலாட்டாக்கள், குக்குகளுடன் காதல் செய்வது, உணவின் பெயரை தவறாக சொல்வது, ஷிவாங்கி – புகழின் காம்போ என பல விஷயங்கள் ரசிகர்களிடம் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இப்படி இருக்க ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 முடிவடைந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த புகழ், சீசன் 3ல் பங்குபெறுவாரா என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில், ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் லான்ச் எபிசோடில் புகழ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கடந்த வாரம் வெளியான எபிசோடில் புகழ் கோமாளியாக கலந்து கொண்டிருந்தார். இவரது வருகையினால் ‘குக் வித் கோமாளி’ செஃப் பட், தாமு, குக், கோமாளிகள் என அனைவரும் எக்கச்சக்க குஷியானார்கள்.

ஆனால், ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எபிசோடில் பழைய புகழை பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது ‘குக் வித் கோமாளி’ சீசன் 1ல் ரம்யா பின்னால் சுற்றிக்கொண்டிருந்த புகழ், சீசன் 2ல் தர்ஷா, பவித்ரா என்று இருவரையும் காதலிப்பது போல நடித்து எக்கச்சக்கமான கலாட்டாக்களை செய்திருந்தார். இந்த காட்சிகள் அத்தனையும் ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்தது. ஆனால் இந்த சீசனில் புகழ், இதுபோன்ற கலாட்டாவில் ஈடுபடவில்லை.

TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இருப்பினும் ரோஷினிக்கு கை கொடுத்தது, சமையலில் ஹெல்ப் செய்தது, அம்மு அபிராமியின் கையை பிடித்தது என்று சில விஷயங்களை செய்திருந்தார். இதில் ஒரு இடத்தில் வைத்து புகழ், அம்மு அபிராமியின் கையை பிடிக்கும் போது சக்தி வந்து அவங்களுக்கு செட் ஆகிடுச்சு என்று சொல்லவும் புகழ் வேகமாக கையை எடுத்து விடுவார். இந்த காட்சியை கண்ட ரசிகர்கள் ரியா, புகழை அந்த அளவுக்கு மிரட்டி வைத்திருக்கிறார்களோ என்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here