உலக தடகள U20 சாம்பியன்ஷிப் – 10,000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் அமித்!

0
உலக தடகள U20 சாம்பியன்ஷிப் - 10,000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் அமித்!
உலக தடகள U20 சாம்பியன்ஷிப் - 10,000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் அமித்!
உலக தடகள U20 சாம்பியன்ஷிப் – 10,000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் அமித்!

நைரோபியில் தற்போது நடைபெற்று வரும் உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் இந்திய வீரர் அமித் 42 நிமிடங்கள் 17.94 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தடகள போட்டிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முடிவுற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து நைரோபியில் தற்போது Under 20க்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதாவது இந்த போட்டியில் 42 நிமிடங்கள் 17.94 வினாடிகளில் இலக்கை அடைந்த வீரர் அமித் பதக்கம் புதிய சாதனை படைத்துள்ளார்.

அனைத்து நாட்களும் கடைகள் இயங்க அனுமதி – வியாபாரிகள் கோரிக்கை!

இதில் தங்கப் பதக்கம் வென்ற கென்யாவை சேர்ந்த வீரர் ஹெரிஸ்டோன் வான்யோன் 42: 10.84 நேரத்தில் இலக்கை கடந்துள்ளார். இவரையடுத்து ஸ்பெயின் வீரர் பால் மெக்ராத் 42: 26.11 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். தற்போது இந்தியாவுக்கான வெற்றிப்பதக்கத்தை உறுதி செய்துள்ள 17 வயதான இந்திய தடகள வீரர் அமித், இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 கிமீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருந்தார். முன்னதாக அவர் 18 வது தேசிய கூட்டமைப்பு கோப்பையில் 40: 40.97 நிமிடங்களில் கடந்து பட்டத்தை வென்றார்.

செப்.1 முதல் ரயில்வே பார்சல் சேவைகள் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

பதக்கம் வென்ற அவர் கூறுகையில், ‘இது எனது முதல் சர்வதேச போட்டி. இதில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு வெள்ளி வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதிக தூரம் கடந்திருப்பதால் எனக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் இந்தியாவின் நம்பிக்கையை என்னால் நிறைவேற்ற முடிந்தது’ என்று தெரிவித்துள்ளார். இது தவிர பந்தய நடைப்பயணத்தில் இந்திய வீரர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் கலப்பு ரிலே பந்தயத்தில், பாரத், பிரியா மோகன், சம்மி மற்றும் கபில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடங்கள் 20.60 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!