பிக் பாஸ் வீட்டில் அமீர், பாவ்னி காதல் உண்மையா? பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டாரா? அதிருப்தியில் அஷ்ரஃப்!

0
பிக் பாஸ் வீட்டில் அமீர், பாவ்னி காதல் உண்மையா? பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டாரா? அதிருப்தியில் அஷ்ரஃப்!
பிக் பாஸ் வீட்டில் அமீர், பாவ்னி காதல் உண்மையா? பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டாரா? அதிருப்தியில் அஷ்ரஃப்!
பிக் பாஸ் வீட்டில் அமீர், பாவ்னி காதல் உண்மையா? பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டாரா? அதிருப்தியில் அஷ்ரஃப்!

பிக்பாஸ் சீசன் 5 தொடங்கப்பட்டு 80 நாட்கள் வரை காதல் கதை எதுவும் வராத நிலையில் நேற்றைய எபிசோடில் அமீர் பாவ்னி காதல் எந்த அளவிற்கு இருக்கிறது என்று மக்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது.

பிக்பாஸ் அமீர்:

ஒரு மாறுபட்ட கான்செப்டில் மக்களின் பெரிய ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சீசனில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 50 நாட்களுக்கு மேல் இரண்டு புதிய போட்டியாளர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் தான் அமீர். அவர் ஒரு நடன இயக்குனர். ஊட்டியில் நடன பள்ளி ஒன்றை நடத்தி வரும் அவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தனது நடன திறமையை காட்டி இருக்கிறார்.

ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் அம்மனாக களமிறங்கிய நடிகை ரட்சிதா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் அமீர் உள்ளே வந்த இரண்டு நாட்களில் பாவ்னி மீது காதலை வெளிப்படுத்தினார். தன்னை விட பெரியவராக இருந்தாலும் போடி வாடி என பேசுவதும் அவரை அடித்து விளையாடுவதும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அவர் தனது வாழ்க்கை கதையை சொன்ன போது தான் அமீர் யார் என மக்களுக்கு தெரிந்தது. அவர் பாவ்னி பின்னால் சுற்றாமல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக இறுதி சுற்றிற்கு செல்வார் என ரசிகர்கள் பலர் அறிவுரை கூறி வருகின்றனர்.

அமீர் அம்மா அப்பா இருவரும் இல்லாமல் இருக்கும் போது அவரை தத்து எடுத்து வளர்க்கும் அர்ஷஃப் அமீர் கண்டிப்பாக அப்படி பையன் இல்லை என சொல்லி இருக்கிறார். மேலும் அமீரை நினைத்து பெருமையாக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சென்ற வாரம் ப்ரீஸ் டாஸ்கில் வந்த போட்டியாளர்களின் உறவினர்களும் இது பற்றி தான் அமீரிடம் சொன்னார்கள். ஆனால் அமீர் நேற்று பேசியதை வைத்து பார்த்தால் பாவ்னி மீதான காதல் உண்மை தான் போல என்று தோன்றுகிறது. என் வீட்டில் இருந்து வருவார்கள் நீ நன்றாக உடை அணிய வேண்டும் என அவர் சொன்னது எல்லாம் பாவ்னியை உண்மையாகவே அமீர் காதலிப்பது போல தெரிகிறது.

தனது மகனின் வீடீயோவை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரீனா – குவியும் வாழ்த்துக்கள்!

மேலும் அமீர் பற்றி அர்ஷஃப் கூறுகையில், அமீர் எங்க பையன், எந்த கெட்டப் பழக்கமும் அவனுக்கு இல்லை. அவன் இப்போது வரை சிங்கிள். அவன் ரொம்ப நேர்மையானவன். அவனுக்கு என சில மிலிட்டரி புரோட்டோக்கால் இருக்கு. காலையில் எழுந்து ஜாக்கிங் போவான். உடற்பயிற்சி செய்வான். இவ்ளோ தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்ளோ சாப்பிட வேண்டும் என்று சில புரோட்டோக்கால் வைத்து வாழ்பவன் இப்படி எல்லாம் அவன் நடந்து கொள்ளமாட்டான் என தெளிவாக சொல்லி இருக்கிறார். இதுவரை அவன் வாழ்க்கையில் எந்த பெண்ணும் இல்லை. 10 வருஷமா நான் அவனை வளர்க்கிறேன் என உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!