பிக் பாஸிற்கு பிறகு மீண்டும் ஜோடி போட்ட அமீர் & பாவனி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
பிக் பாஸிற்கு பிறகு மீண்டும் ஜோடி போட்ட அமீர் & பாவனி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸிற்கு பிறகு மீண்டும் ஜோடி போட்ட அமீர் & பாவனி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸிற்கு பிறகு மீண்டும் ஜோடி போட்ட அமீர் & பாவனி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு கவர் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

பிக் பாஸ் பாவனி

மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சீசன் 5 சுமார் 106 நாட்கள் வரை ஒளிபரப்பாகி கடந்த மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் 2 வைல்ட் கார்டு என்ட்ரி உட்பட மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு நாளும் கலாட்டாக்கள், பிரச்சனைகள் என்று ஆரவாரமாக ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5ன் டைட்டில் வின்னராக ராஜு தேர்வு செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருந்தனர்.

IPL 2022: மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் – பிரியம் கார்க் பேட்டி!

அந்த வகையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிவடைந்ததும் இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் வழக்கம் போல தங்களது அன்றாட வேலைகளை செய்யத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, ராஜு, அக்ஷரா, அபிநய் ஆகியோர் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கி இருக்கும் நிலையில், பிரியங்கா மீண்டும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இடம்பிடித்துள்ளார். தவிர நிரூப், அபிநய், தாமரை செல்வி, ஸ்ருதி ஆகியோர் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு – இன்றைய நிலவரம்!

இதற்கிடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேட்டிகள், லைவ் சேட் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களுடன் உரையாடலை நடத்தி வருகின்றனர் ‘பிக் பாஸ்’ பிரபலங்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த அமீர் மற்றும் பாவனி இருவரும் எனிமி திரைப்படத்தில் வரும் ‘டம் டம்’ என்ற பிரபலமான பாடலுக்கு நடனமாடி உள்ளனர். இந்த சிறப்பு கவர் பாடலில் அமீர் மற்றும் பாவனியுடன் இணைந்து சீரியல் நடிகை ஸ்ரீநிதி, பவித்ரா, விஜே பார்வதி, விஜே ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!