சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வீரர் அம்பதி ராயுடு வெளியிட்ட பதிவால் குழப்பம் – காசி விஸ்வநாதன் விளக்கம்!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வீரர் அம்பதி ராயுடு வெளியிட்ட பதிவால் குழப்பம் - காசி விஸ்வநாதன் விளக்கம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வீரர் அம்பதி ராயுடு வெளியிட்ட பதிவால் குழப்பம் - காசி விஸ்வநாதன் விளக்கம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வீரர் அம்பதி ராயுடு வெளியிட்ட பதிவால் குழப்பம் – காசி விஸ்வநாதன் விளக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக IPL 2022 போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு, இது தன்னுடைய கடைசி ஐபிஎல் என்ற ட்வீட்டை பதிவிட்டு அதை நீக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அம்பதி ராயுடு

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு IPL 2022 சீசன் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றிகளை பெற்றுத் தரவில்லை. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் சுமார் 8 ஆட்டங்களில் தோல்வியை பெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே நேரத்தில் தனது கடைசி ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றதன் மூலம் அவர்கள் பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இப்படி இருக்க அடுத்த சீசனில் தோனி இருப்பாரா, தோனியை விட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – VIP தரிசனம் ரத்து!

இந்த நிலையில் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2022 சீசன் தனது கடைசி ஐபிஎல் என்று ட்வீட் செய்த சிஎஸ்கே நட்சத்திரம் அம்பதி ராயுடு பின்னர் அந்த ட்வீட்டை நீக்கி இருக்கிறார். அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் மூத்த பேட்டரான அம்பதி ராயுடு IPL 2022 தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று இன்று மதியம் 12:46 மணிக்கு ஒரு ட்வீட்டை வெளியிட்டார். ஆனால் பதிவு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அது நீக்கப்பட்டிருக்கிறது. அந்த பதிவில், ‘இது எனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 ஆண்டுகளாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Exams Daily Mobile App Download

அதனால் இந்த அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் CSKக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நீக்கப்பட்ட ட்வீட் ரசிகர்களின் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த பதிவு குறித்து விளக்கம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ‘அவர் நன்றாக இல்லை என்று அவர் சற்று ஏமாற்றமடைந்தார். எனவே, அவர் அந்த ட்வீட்டை தவறாகப் போட்டார். நான் அவரிடம் விஷயங்களை விளக்கினேன். அவர் ஓய்வு பெறவில்லை. அவர் நம்முடன் இருப்பார்’ என்று கூறியுள்ளார். இப்போது நடப்பு ஐபிஎல் போட்டியில் அம்பதி ராயுடு 12 ஆட்டங்களில் விளையாடி 27.10 சராசரியில் 271 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here