Amazon Prime மெம்பர்ஷிப் கட்டணம் திடீர் அதிகரிப்பு – பயனர்கள் அதிர்ச்சி! புதிய கட்டண விபரம்!

0
Amazon Prime மெம்பர்ஷிப் கட்டணம் திடீர் அதிகரிப்பு - பயனர்கள் அதிர்ச்சி! புதிய கட்டண விபரம்!
Amazon Prime மெம்பர்ஷிப் கட்டணம் திடீர் அதிகரிப்பு - பயனர்கள் அதிர்ச்சி! புதிய கட்டண விபரம்!
Amazon Prime மெம்பர்ஷிப் கட்டணம் திடீர் அதிகரிப்பு – பயனர்கள் அதிர்ச்சி! புதிய கட்டண விபரம்!

இந்தியாவில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆண்டுத் திட்டத்தின் விலை ரூ .1,499 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம்:

தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கினால் வீட்டிற்குள் முடங்கி போயுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் மக்களுக்கு பொழுது போக்க பெரிதும் கைகொடுப்பது OTT தளங்கள் தான். தொடர்ந்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டின் விளைவால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்கள் அனைத்தும் OTT தளங்களில் மட்டுமே வெளியிடப்படுகிறது. மக்களின் பொழுதுபோக்கில் OTT தளங்கள் முக்கிய பங்கு வகிக்க தொடங்கியுள்ளது.

L & T Infotech நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான தகவல்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து ஐஎன் இல் ப்ரைம் உறுப்பினர்களுக்கு வழங்கும் மதிப்பை தொடர்ந்து நிறுவனம் அதிகரித்து வருகிறது. பிரைம் பயனர்கள் இணையற்ற ஷாப்பிங், சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு நன்மைகளை ஒவ்வொரு நாளும் கூடுதல் வசதிகளுடன் வழங்கி வருகிறது. அதிக நன்மைகளை வழங்குவதற்கு நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்வதாக ஒரு பத்திரிகைக்கு வழங்கிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமேசான் இந்தியாவில் பிரைம் மெம்பர்ஷிப் விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் – மாநில அரசு அறிவிப்பு!

அதன்படி, ஆண்டிற்கான திட்டத்த்தின் விலை ரூ.999 ல் இருந்து தற்போது ரூ.1,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நெட்ஃபிக்ஸ், ஆப்பிள், பிளிப்கார்ட் மற்றும் பல போன்ற ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களால் வழங்கப்படும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது அமேசான் பிரைம் மிகவும் குறைந்த விலையில் திட்டங்களை வழங்கும் OTT தளங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த விலை உயர்வு மாற்றங்கள் விரைவில் பயனர்களுக்கு செயல்படுத்தப்படும். ஆனால் அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விலை உயர்வு எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்று சரியான தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!