விளம்பரம் இல்லாத வீடியோக்களை தொடர கூடுதல் கட்டணம் – Amazon Prime நிறுவனம் திடீர் அறிவிப்பு!
விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை தொடர்வதற்கு அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக அமேசான் பிரைம் நிறுவனம் புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
Amazon Prime:
நாட்டின் முன்னணி ஓடிடி செயலிகளில் ஒன்றான அமேசான் ப்ரைம் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எக்கச்சக்கமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது, மாதாந்திர கட்டணமாக ரூ. 299ல் துவங்கி, ஒரு வருட கட்டணமாக ரூ. 1499 வரை வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து அமேசான் பிரைம் நிறுவனம் விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பார்ப்பதற்கு கூடுதல் கட்டணங்களை வசூல் செய்ய இருப்பதாக இரண்டு விதமான சந்தாக்களை அறிமுகம் செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, விளம்பரங்களுடன் வீடியோக்களை தொடர விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ. 1162ல் பிளானை வழங்க இருக்கிறது. ஆனால், விளம்பரம் இல்லாத வீடியோக்களுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக ரூ. 248 வசூல் செய்ய இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கடந்தாண்டு விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பார்ப்பதற்கு மாதம் ரூ. 912 வரையிலும் வசூல் செய்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனமும் தனது விலையை உயர்த்தி உள்ளது. தற்போதைக்கு அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் கட்டணத்தை மட்டுமே அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து இந்திய வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.