ICRTC யின் அட்டகாசமான ஆன்மீக டூர் பேக்கேஜ் – மீனாட்சி அம்மன் கோவில் டூ குமரி திருவள்ளுவர் சிலை!

0
ICRTC யின் அட்டகாசமான ஆன்மீக டூர் பேக்கேஜ் - மீனாட்சி அம்மன் கோவில் டூ குமரி திருவள்ளுவர் சிலை!
ICRTC யின் அட்டகாசமான ஆன்மீக டூர் பேக்கேஜ் - மீனாட்சி அம்மன் கோவில் டூ குமரி திருவள்ளுவர் சிலை!
ICRTC யின் அட்டகாசமான ஆன்மீக டூர் பேக்கேஜ் – மீனாட்சி அம்மன் கோவில் டூ குமரி திருவள்ளுவர் சிலை!

ஐஆர்சிடிசி நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து திருப்பதி, சென்னை, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள கோயில்கள் மற்றும் குமரி திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது.

சுற்றுலா பேக்கேஜ்:

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வதற்கு ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் சார்பில் புதிய பேக்கேஜ் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த திட்டத்தில் டெல்லியில் தொடங்கி சென்னை, திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு இந்த ஆன்மீக பேக்கேஜ் மூலம் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின் மூலமாக விமானம் மூலம் பயணம் செய்வார்கள்.

TNPSC குரூப் 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 09) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

மேலும் ஐஆர்சிடிசியின் இந்த புதிய திட்டம் மொத்தம் 7 நாட்கள், 6 இரவுகள் அடங்கும். மூன்று நபர்கள் பயணித்தால் ஒரு நபருக்கான கட்டணம் 45,260 ரூபாய். இரண்டு நபர்கள் பயணித்தால் ஒரு நபருக்கு ரூ.47,190 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு நபர் தனியாக பயணித்தால் 59,760 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு படுக்கையுடன் கூடிய வசதிக்கு 40,120 ரூபாய் கட்டணமும், படுக்கை இல்லாத வசதிக்கு 35,610 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.

மேலும் 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரூ.28,820 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் டெல்லியில் இருந்து கிளம்பி மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் உள்ளிட்ட தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களுக்கும் குமரி திருவள்ளுவர் சிலை ஆகிய தலங்களுக்கு செல்லலாம். இந்த பேக்கேஜில் விமான டிக்கெட், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!