ஆலியா, சஞ்சீவ் ” ஒட்டிக்கவா, கட்டிக்கவா” – வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0

ஆலியா, சஞ்சீவ் ” ஒட்டிக்கவா, கட்டிக்கவா” – வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

ராஜா ராணி சீரியல் நடிகை, ஆலியாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா முழுக்க முழுக்க தனது மகனுடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ரம்ஜானை ஆலியா மற்றும் சஞ்சீவ் விமர்சையாக கொண்டாடி வீடியோ வைரலானது, அதை தொடர்ந்து சஞ்சீவும், ஆலியாவும் சேர்ந்து உள்ள போட்டோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே “ஐலா” என்ற பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் நடிக்க ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இந்த சீசனிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆலியா மானசா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாகவும் அவர் சீரியலில் நடித்து வந்தார்.

144 தடை உத்தரவு நாளை வரை நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு! போலீசார் தீவிர கண்காணிப்பு!

பிரசவத்தின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். மேலும் இவருக்கு ,ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய குழந்தைக்கு அர்ஷ் என பெயர் சூட்டியுள்ளார். ஆலியா சீரியலில் இருந்து விலகியது தற்காலிகமானது என சொல்லி வந்த நிலையில் சமீபத்தில் இவர் இனி ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வர மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் மாடல் அழகி ரியா விஸ்வநாதன் நடித்து வருகிறார். ரியா வை, ரசிகர்கள் சந்தியாவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இவரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார்.

சீரியலில் இருந்து விலகிய ஆலியா, தனது முழு நேர வேலையாக குடும்பத்தை பார்த்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில், ஆலியா தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை ஆலியா மற்றும் சஞ்சீவ் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதாவது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வீட்டிலேயே பிரியாணி ரெடி செய்து ரம்ஜானை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் ஆலியாவும், சஞ்சீவும் மழையில் சேர்ந்து நனைவது போன்ற போட்டோக்கள், வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் இருவரும் “ரொமான்டிக்” லுக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!