“அர்ஷ் என்னை தூங்கவிட மாட்றான்” – நடிகை ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ! குவியும் லைக்குகள்!

0
"அர்ஷ் என்னை தூங்கவிட மாட்றான்" - நடிகை ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ! குவியும் லைக்குகள்!
“அர்ஷ் என்னை தூங்கவிட மாட்றான்” – நடிகை ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ! குவியும் லைக்குகள்!

தமிழ் சின்னத்திரையில் சிறந்த ஜோடியாக கலக்கி வரும் நடிகை ஆலியா மானசா சஞ்சீவ் அவர்களுக்கு தற்போது இரண்டாவதாக அர்ஷ் என்ற பையன் பிறந்திருக்கிறான். இந்நிலையில் பெரிய நடிகையாக இருந்தாலும் தன்னுடைய மகனை கவனித்து கொள்ளும் சிறந்த அம்மாவாக ஆலியா இருக்கிறார். மேலும் அர்ஷ் தன்னை தூங்கவே விடுவதில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ஆலியா மானசா:

தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். தன்னுடைய மகள் பிறந்து சில மாதங்களில் ஆலியா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் சீரியலில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பிரசவத்திற்கு சில நாட்கள் முன்னர் வரை அவர் சீரியலில் நடித்து வந்த நிலையில் அதன் பின் குழந்தைக்காக சீரியலை விட்டு விலகினார்.

ராதிகாவிற்காக பாக்கியா தொழிலை தொடங்க சொல்லும் கோபி, சந்தேகத்தில் செல்வி – “பாக்கியலட்சுமி” சீரியலில் நாளை!

அதன் பின் கடந்த மாதம் அவர்களுக்கு அர்ஷ் என்ற மகன் பிறந்தான். அது பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். மேலும் குழந்தையின் முதல் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. அதனை தொடர்ந்து ஆலியா இரண்டாவது முறை தாயான மகிழ்ச்சியில் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது பல புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது அர்ஷை கவனித்து கொள்ளும் அவர் பல வீடியோக்களை பதிவிடுவார்.

Exams Daily Mobile App Download

தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் அர்ஷ் இரவெல்லாம் என்னை தூங்கவே விடவில்லை என பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் தன்னுடைய மகனை கண்ணும் கருத்துமாக பார்த்து வருவதை நினைத்து ஆலியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஐலா அர்ஷ் பாப்பாவின் அழகான வீடியோக்களை எதிர்பார்த்து ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆலியாவின் இந்த பதிவு ட்ரெண்டாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!