‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் நிம்மதி!

0
'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் நிம்மதி!
'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் நிம்மதி!
‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் நிம்மதி!

தற்போது ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகுவதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இது குறித்த ரசிகரின் கேள்விக்கு ஆல்யா தனது இன்ஸ்டா பதிவில் பதில் அளித்துள்ளார்.

ராஜா ராணி 2:

சின்னத்திரையின் டாப் ஹிட் ஜோடியான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மனசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக இவர்கள் காதல் பயணம் தொடங்கி தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தனது கர்ப்ப காலத்தின் போது சிறிது காலம் ஓய்வில் இருந்து, நடிப்பிற்கு இடைவெளி விட்டார் ஆல்யா. ஆனால் அப்போது ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டார். அதன் பின்னர் குழந்தை பிறந்த பின்னர், தீவிர உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண், வெற்றிக்கு காத்திருந்த அதிர்ச்சி – மெகா சங்கமம் ப்ரோமோ ! ரசிகர்கள் ஷாக்!

ராஜா ராணி சீசன் 2 நிகழ்ச்சியில் சந்தியா என்ற ஐபிஎஸ் அதிகாரியாக ஆக துடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா மீண்டும் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனால் ராஜா ராணி 2 ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஆனால் இந்த தகவல் குறித்த உண்மை நிலை தெரியாமல் இருந்து வந்தது.

சரஸ்வதியை மருமகளாக ஏற்க மறுக்கும் கோதை? பதிலை கேட்டு ஷாக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணிகள்!

நேற்று ஆல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்விகள் கேட்கலாம் என்று குறிப்பிட்டு பதிவிட்டார். இதனால் ரசிகர்கள் ஆல்யா குறித்த பல கேள்விகளையும் கேட்டு வந்தனர். அதில், ஒரு ரசிகர், நீங்கள் ராஜா ராணி 2 சீரியலை விட்டு உண்மையாக விலக போகிறீர்களா? என்ற கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு ஆல்யா, இல்லை அந்த தகவல் பொய்யானது. நான் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலக போவதில்லை என்று பதில் அளித்துள்ளார். ஆல்யாவின் இந்த பதிலை அறிந்த அறிந்த அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here