முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் உற்சாகம்!

0
முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா - ரசிகர்கள் உற்சாகம்!
முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா - ரசிகர்கள் உற்சாகம்!
முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல் ஒன்றில் நடித்து டாப் கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஆலியா மானசா. அவருக்கு சமீபத்தில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது மகனின் முதல் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

ஆலியா மகன் புகைப்படம்:

தமிழ் சீரியல்கள் பார்க்க ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் ஆலியா ஜோடி. சின்னத்திரையில் டாப் ஜோடி வரிசையில் இவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் ஆலியா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார்.

கோபி, ராதிகா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

அவர்களுக்கு சில நாட்களுக்கு முன் மகன் பிறந்தான். குழந்தை பிறந்தது முதல் சமூக வலைத்தளங்கள் அதிகம் பேசப்பட்ட கன்டென்ட் என்றால் அது ஆலியாவின் மகன் பற்றியது தான். தனது மகனிற்கு அர்ஷ் என பெயர் வைத்து மகிழ்ந்து வருகின்றனர். குழந்தை பிறந்தது முதல் வீடியோக்களில் வராத ஆலியா தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அர்ஷின் அழகான அழுகையை பார்த்து சஞ்சீவ் ரசித்து இருக்கிறார். மேலும் ஐலா பாப்பாவும் தன்னுடைய தம்பியை பாசமாக பார்த்துக் கொள்கிறார்.

ExamsDaily Mobile App Download

இந்நிலையில் ஆலியா முதன்முறையாக தனது மகனின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே ஆலியாவின் மூத்த மகள் ஐலா சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கும் நிலையில் அர்ஷ் ட்ரெண்ட் ஆவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ரசிகர்கள் அர்ஷின் புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆலியா மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!