ஆல்யா மானஸாவின் புது சீரியல் ஸ்டார்ட் ஆயிடுச்சு..ஹீரோ யாரு தெரியுமா?- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ஆல்யா மானஸா கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் எந்த சேனலில், எந்த ஹீரோவுடன் நடிக்க உள்ளார் என்பது போன்ற தகவல்கள் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஆல்யா மானஸா:
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அவதாரம் எடுத்தவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் நடன கலைஞராக, பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் சீரியல் ஹீரோயின் வாய்ப்பு ஆல்யாவை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது. சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கான ரசிகர்களை ஆல்யா பெற்றுள்ளார்.
சென்னையில் மழை நீரை கண்காணிக்க சிறப்பு திட்டம் – ஐஐடி மாணவர்களுடன் இணைந்த மாநகராட்சி!
அதன்பிறகு, ராஜா ராணி சீரியல் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை பிறந்த பிறகு, ராஜா ராணி சீரியல் 2 ல் ஆல்யா நடித்து வந்தார். அதில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரம் அமைந்தது. ஆனால் மீண்டும் ஆல்யா கர்ப்பமானதை அடுத்து அந்த சீரியலில் இருந்து விலகி, கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்டது. சமீப நாட்களாக ஆல்யா மீண்டும் நடிக்க தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
இதை உண்மையாக்கும் வகையில் ஆல்யா தனது யூடியூப் சேனலில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஆல்யா தனது புது சீரியலின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு செல்வது காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைசி வரை எந்த சேனல், ஹீரோ யார், சீரியல் பெயர் போன்ற எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் ஆல்யா சமாளித்து விட்டார். விரைவில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் என்றும் ஆல்யா கூறியுள்ளார்.