பிரசவ அறையிலும் மேக்கப் போட்ட நடிகை ஆலியா மானசா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

0
பிரசவ அறையிலும் மேக்கப் போட்ட நடிகை ஆலியா மானசா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
பிரசவ அறையிலும் மேக்கப் போட்ட நடிகை ஆலியா மானசா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
பிரசவ அறையிலும் மேக்கப் போட்ட நடிகை ஆலியா மானசா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சின்னத்திரை நடிகையான ஆலியா மானசாவிற்கு 10 நாட்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தன்னுடைய பிரசவ நாள் அன்று நடந்த சம்பவங்கள் பற்றி வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அதில் ஆப்ரேசன் போகும் போது கூட மேக்கப் போட்டதால் நெட்டிசன்கள் அதை கலாய்த்து வருகின்றனர்.

நடிகை ஆலியா:

இந்த காலத்தில் சினிமா நடிகர் நடிகைகளை விட சீரியல் நடிகை நடிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆலியா மற்றும் சஞ்சீவ். இந்த ஜோடி தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக இருக்கின்றனர். அவர்களின் மூத்த மகள் ஐலாவின் அழகான செயல்களை பார்க்க பலர் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார்.

சரவணனை புகழ்ந்த சந்தியா, ராஜா ராணி 2 சீரியலில் அடுத்த திருப்பம் – ரசிகர்கள் உற்சாகம்!

அவருக்கு 10 நாட்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு இரண்டாவதும் ஆப்ரேசன் மூலமாக குழந்தை பிறந்துள்ளதாக ஆலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். மேலும் தன்னுடைய பிரசவத்தின் போது அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது பற்றியும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதில் ஆலியா வலியுடன் மருத்துவமனைக்கு வந்தது முதல் சஞ்சீவ் ஆலியாவிற்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தார் என்பது எல்லாம் காட்டப்பட்டது.

மேலும் தனது அம்மாவிற்கு குழந்தை பிறக்க போகிறது என தெரியாமல் ஐலா பாப்பா சேட்டைகள் செய்தது ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதன் பின் ஆப்ரேசன் உடை அணிந்து அவரை கூட்டிக் கொண்டு போக சொல்லும் போது தனது மாமியாரை மேக்கப் போட சொன்னதும் அவர் வந்து மேக்கப் போட்டு விடுகிறார். அதனால் ரசிகர்கள் இந்த நேரத்தில் கூட மேக்கப் முக்கியமா என சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here