நடிகை ஆலியா வளைகாப்பு நிகழ்ச்சியில் வெளியான வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகை ஆலியா வளைகாப்பு நிகழ்ச்சியில் வெளியான வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா வளைகாப்பு நிகழ்ச்சியில் வெளியான வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா வளைகாப்பு நிகழ்ச்சியில் வெளியான வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் ஆலியா மானசா கடந்த மாதம் இரண்டாவது முறை ஆண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் ஆலியாவின் வளைகாப்பு கோலாகலமாக நடந்த நிலையில் அது குறித்த மேக்கப் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ஆலியா மானசா:

சின்னத்திரை கதாநாயகிகளுக்கு சினிமா ஹீரோயின் போல ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குடும்பக் கதையை மையமாக வைத்து சீரியல்கள் எடுக்கப்படுவதால் அதில் நடிக்கும் கதாபாத்திரங்களை தங்களுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக ரசிகர்கள் பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அப்படி புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சித்தார்த் நடித்து வருகிறார்.

செயற்கை முறை கருவுறுதலில் தோல்வியடைந்த முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் சோகம்!

கதாநாயகியாக தொடக்கத்தில் நடிகை ஆலியா மானசா நடித்தார். ஆனால் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ரியா நடித்து வருகிறார். ஆலியா தன்னுடைய கர்ப்பகாலத்தை நல்லபடியாக ரசித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனிற்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ள நிலையில் அது பற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

இந்நிலையில் இரண்டாவது குழந்தையாக இருந்தாலும் சஞ்சீவ் தனது மனைவியின் வளைகாப்பை கோலாகலமாக நடத்தினார். அதில் ஏகப்பட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆலியாவும் சஞ்சீவ் அவர்களும் மணப்பெண் கோலத்தில் தயாராகி இருந்தனர். மிகவும் ஆடம்பரமான உடை அணிந்து இருந்தனர். அந்த வகையில் ஆலியா அந்த நிகழ்ச்சிக்காக எப்படி மேக்கப் போட்டு கொண்டார் என்பது பற்றிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆலியா வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!