‘ராஜா ராணி 2’ ஷூட்டிங்கில் நிறைமாத கர்ப்பிணியாக வலம் வரும் ஆலியா மானஸா – ரசிகர்கள் ஷாக்!

0
'ராஜா ராணி 2' ஷூட்டிங்கில் நிறைமாத கர்ப்பிணியாக வலம் வரும் ஆலியா மானஸா - ரசிகர்கள் ஷாக்!
'ராஜா ராணி 2' ஷூட்டிங்கில் நிறைமாத கர்ப்பிணியாக வலம் வரும் ஆலியா மானஸா - ரசிகர்கள் ஷாக்!
‘ராஜா ராணி 2’ ஷூட்டிங்கில் நிறைமாத கர்ப்பிணியாக வலம் வரும் ஆலியா மானஸா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் ஷூட்டிங்கில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து வருபவர் நடிகை ஆலியா மானஸா. அவரது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஆலியா மானஸா

தமிழ் சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளில் காதலித்து, திருமணமாகி, குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் இன்று வரை அதிகளவு மக்களின் பேவரைட் ஆக இருந்து வருவது ‘ராஜா ராணி’ சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா ஜோடி தான். இந்த ரியல் ஜோடி ரீல் ஜோடியாக இருக்கும் போதில் இருந்து இப்போது வரையும் மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா பற்றி பேசும் போதும் சரி, அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் என பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? கடந்து வந்த பாதை – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த தம்பதிகளில் அப்படி என்ன விஷயம் ரசிகர்களை ஈர்க்கிறது என்று பார்க்கும் போது குறிப்பாக தென்படுவது சஞ்சீவ், ஆலியா மானஸாவை கவனித்து கொள்ளும் விதம் தான். எப்போதும் சுறுசுறுப்பாக, குழந்தைத்தனமான சேட்டையுடன் காணப்படும் நடிகை ஆலியா மானஸா சிறிய வயதில் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாகி தற்போது 2வது குழந்தையையும் பெற்றெடுக்க இருக்கிறார். அந்த வகையில் திருமணத்திற்கு முன்பாகவும் சரி, இப்போதும் சரி ஐலாவுடன் சேர்த்து ஆலியா மானஸாவையும் ஒரு குழந்தை போல இவர் பார்த்துக்கொள்ளும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய ஷாரிக் & சினேகன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்போது ‘ராஜா ராணி 2’ சீரியலில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து கொண்டிருக்கும் ஆலியா மானஸாவின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ஆன ‘கயல்’ 100வது நாளுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் ‘கயல்’ சீரியல் நடிகர் சஞ்சீவ் கலந்து கொண்டுள்ளார். அப்போது சீரியல் குழுவினர் கேக் வெட்டும் போது நடிகை சைத்ரா ரெட்டியின் புகைப்படம் இடம்பிடித்திருக்க அதனை எடுத்து சைத்ராவின் கணவரிடம் ஒப்படைகின்றனர்.

அதே போல சஞ்சீவின் புகைப்படத்துடன் கூடிய கேக்கை ‘ராஜா ராணி 2’ சீரியல் படப்பிடிப்பிற்கு எடுத்து சென்று அதனை ஆலியா மானஸாவிடம் ஒப்படைக்க, அந்த கேக்கை ஆலியா வாங்குகிறார். இப்போது எதிரில் நிற்கும் சஞ்சீவ் இதை என்ன செய்ய போகிறாய் என்று கேட்கையில், கேக் எதற்கு சாப்பிட தானே என்று சொல்லும் ஆலியா மானஸா ஒரே வாயில் அதனை சாப்பிடுகிறவாறு கியூட்டான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து வரும் ஆலியா மானஸாவை கண்ட ரசிகர்கள் இரண்டாவது குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!