அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

0
அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை ஆலியா மற்றும் சஞ்சீவ் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா. இவர் ராஜா ராணி தொடரில் தன்னுடன் சேர்ந்து நடித்த சஞ்சீவை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்தாலும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே உடம்பை குறைத்து பழையபடி சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

விஜய் டிவி “ஈரமான ரோஜாவே 2” சீரியலில் நடந்த பெரிய திருப்பம் – ப்ரியாவிடம் பொய் சொன்ன ஜீவா!

ஆலியாவின் துணிச்சலை பலரும் பாராட்டினர். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரைக்கும் நடக்கவே சிரமப்படும் தாய்மார்களுக்கு மத்தியில் ஆலியா துணிச்சலாக இருந்து வந்தார். இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். இந்த சீரியலிலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். பிரசவ நாளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார்.

Exams Daily Mobile App Download

தற்போது ஆலியாவிற்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா முழுக்க முழுக்க தனது மகனுடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை ஆலியா மற்றும் சஞ்சீவ் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதாவது, குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் வீட்டிலேயே பிரியாணி ரெடி செய்து ரம்ஜானை கொண்டியுள்ளனர். அந்த வீடியோவை ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!