நடிகை ஆலியா மானஸா & சஞ்சீவ் வீட்டில் நடந்த விசேஷம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகை ஆலியா மானஸா & சஞ்சீவ் வீட்டில் நடந்த விசேஷம் - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா மானஸா & சஞ்சீவ் வீட்டில் நடந்த விசேஷம் - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா மானஸா & சஞ்சீவ் வீட்டில் நடந்த விசேஷம் – ரசிகர்கள் உற்சாகம்!

பிரபல சின்னத்திரை தம்பதிகள் ஆலியா மானஸா மற்றும் நடிகர் சஞ்சீவ் வீட்டில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தவிழா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ஆலியா மானஸா:

தமிழ் சின்னத்திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானஸா. விஜய் டிவி சீரியலில் ரீல் ஜோடியாக ஆரம்பித்த இவர்களின் காதல் வாழ்க்கை இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. தற்போது சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸாவின் அழகான காதலுக்கு சான்றாக ஒரு பெண், ஒரு ஆண் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் 2வது குழந்தையான அர்ஷ் பிறந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆகிறது. இப்போது குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக சீரியல்களில் நடிப்பதை விட்டு விலகி இருக்கும் நடிகை ஆலியா மானஸா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

பாக்கியாவிடம் கையும் களவுமாக சிக்கிய கோபி, ராதிகா பற்றிய உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!

குறிப்பாக ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவ் இருவரும் தங்களது பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், குடும்ப நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், டிராவல் வ்லாக் என பல ஸ்வாரசியமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் உற்சாகப்படுத்துவதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சஞ்சீவின் குடும்பத்தினர் ஒருவருக்கு நிச்சயதார்த்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் சஞ்சீவ், அவரது அம்மா, தம்பி, நடிகை ஆலியா மானஸா, ஐலா என குடும்பமாக சேர்ந்து பங்குபெற்றுள்ளனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் முஸ்லிம் முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவை வீடியோவாக எடுத்து அதை யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர் இந்த நட்சத்திர தம்பதி. இந்த வீடியோவில் ஆலியா மற்றும் ஐலா பாப்பாவின் கலாட்டாக்கள், குடும்ப உறவுகளின் அறிமுகம், சாப்பாடு, விருந்து என பல விஷயங்கள் இடம்பிடித்திருந்தது. இப்போது டிவி சீரியல்களில் நடிகை ஆலியா மானஸாவை பார்க்க முடியாத ரசிகர்கள் இந்த வீடியோ மூலம் அவரை பார்த்ததில் சற்று உற்சாகமடைந்துள்ளனர். மேலும், இந்த வீடியோ ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவின் மற்ற வீடியோக்களை போலவே லைக்குகளை குவித்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!