ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா 4 கிலோ அரிசி – அமைச்சர் வழங்கல்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா 4 கிலோ அரிசி - அமைச்சர் வழங்கல்!
ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா 4 கிலோ அரிசி - அமைச்சர் வழங்கல்!
ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா 4 கிலோ அரிசி – அமைச்சர் வழங்கல்!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்டத் திமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (ஜூன் 3ம் தேதி) தொடங்கி வைத்தார்.

கலைஞர் பிறந்தநாள் :

கலைஞர் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் ஜூன் 3 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பள்ளியில் படிப்பதை காட்டிலும் இசை, எழுத்து மற்றும் சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வமாகவும், ஈடுபாட்டுடன் இருந்தார். இளம் வயதில் பல்வேறு தமிழ் தலைவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் கருணாநிதி. இவரால் துவங்கப்பட்ட மாணவநேசன் என்னும் இதழ் தற்போது முரசொலி என்னும் நாளிதழாக உருவெடுத்துள்ளது. இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் கருணாநிதி ஆவர்.

TN Job “FB  Group” Join Now

98வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 3,19,816 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் கொரோனா நிவாரணமாக தலா 4 கிலோ அரிசி வீதம் ரூ.4 கோடி மதிப்பில் 1,279 டன் அரிசி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோடாங்கிப்பட்டியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

பொறியியல், மருத்துவ படிப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

மேலும் அந்த நிகழ்ச்சியில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர் முனவர் ஜான், துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி, பூவை ரமேஷ் பாபு, நகர பொறுப்பாளர்கள் எஸ்.பி.கனகராஜ், வடக்கு கரூர் கணேசன், வழக்கறிஞர் சுப்பிரமணிய உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை, ராகவேந்திரா ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உணவு வழங்கினர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!