வீடு வாங்க திட்டமிடுபவர்கள் தவறாமல் படிங்க – ‘ஆல் டைம் லோ வட்டி’ வங்கிகள்!

0
வீடு வாங்க திட்டமிடுபவர்கள் தவறாமல் படிங்க - 'ஆல் டைம் லோ வட்டி' வங்கிகள்!
வீடு வாங்க திட்டமிடுபவர்கள் தவறாமல் படிங்க - 'ஆல் டைம் லோ வட்டி' வங்கிகள்!

வீடு வாங்க திட்டமிடுபவர்கள் தவறாமல் படிங்க – ‘ஆல் டைம் லோ வட்டி’ வங்கிகள்!

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பல வங்கிகள் குறைந்த அளவு வட்டியுடன் லோன் வழங்குகிறது. அந்த வகையில் எந்த வங்கிகளில் குறைவான வட்டி வழங்கப்படுகிறது என்ற விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு லோன்

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் கொண்டாலே பலருக்கு வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணமே வராது. அந்த அவளவுக்கு காய்கறிகள் துவங்கி கார் வாங்குவது அவரை அனைத்திற்குமே விலை அதிகமாகத்தான் காணப்படுகிறது. அதனால் சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் கனவாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் கனவை நிறைவேற்றி தருவது வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடன்கள் தான்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் வங்கிகளில் வீட்டுக்கடனுக்கான வாங்கப்படும் வட்டி விகிதமானது தற்போது மிகக்குறைவாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா போன்ற பேரிடர் காலத்திலேயும் வங்கிகளில் ஆல் டைம் லோ விகிதத்தில் வீட்டுக்கடனுக்கான வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த ஆல் டைம் லோ வட்டியின் அடிப்படையில் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் குறைவாக வசூலிக்கப்படும். இதே நேரத்தில் மாதந்தோறும் செலுத்தும் EMI தொகையும் குறைவாகவே இருக்கும்.

தமிழகத்தில் இன்று முதல் வங்கி சேவை நேரம் குறைப்பு – ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி!!

ரிசர்வ் வங்கியுல் சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், வங்கிகளின் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுவரை ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களின் வட்டி விகிதமானது குறைவாகவே உள்ளது. இது தவிர மீடியம் டெர்மில் வீடு வாங்குபர்களுக்கு குறைவான அளவே வட்டி விகிதம் அனுமதிக்கப்படும். தற்போது வரை வங்கிகளில் ரெப்போ விகிதமானது 4% ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா – 2,427 பேர் உயிரிழப்பு!!

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆக உள்ளது. இந்த விகிதமானது சில மாதங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கோடக் மகேந்திரா வங்கி, வீட்டுக்கடனிற்கான வட்டி விகிதத்தை 10 வருடத்திற்கு 6.65% ஆக குறைத்துள்ளது. இவற்றில் GST யுடன் சேர்த்து 0.50% ஆக உள்ளது. பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, எஸ்பிஐ பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆகியவற்றில் வீட்டுக்கடனுக்கான ஆரம்ப வட்டி விகிதம் 6.65% ஆக உள்ளது. இவ்வங்கியில் ஒருவர் வீட்டுக்கடனை 40 வயது வரை செலுத்திக் கொள்ளலாம்.

‘கோபி மீது சந்தேகப்படும் ராதிகா’ – எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர்!!

SBI வங்கியை பொருத்தளவு, 6.70% முதல் வீட்டுக்கடன் கொடுக்கப்படுகிறது. பெண் வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கியில் சிறப்பு சலுகையும் உண்டு. தொடர்ந்து HDFC வங்கியில் வீட்டுக்கடனுக்கு வட்டி விகிதம் 6.75% ஆக உள்ளது. இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணம் வாடிக்கையாளார்களுக்கு ஏற்றவாறு மாற்றமடையும். ICICI வங்கியில் வட்டி விகிதம் 6.75% ஆக உள்ளது. இவ்வங்கியின் செயல்பாட்டு கட்டணமும் வாடிக்கையாளர்களை பொறுத்து மாறுபடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!