அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – மேலும் இரண்டு பல்கலைக்கழக அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி !

0
அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – மேலும் இரண்டு பல்கலைக்கழக அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் உள்ள கலை- அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் இறுதி ஆண்டு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த செய்தி மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கல்வியர்களால் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முடிவுக்கு யுஜிசி தரப்பில் பெரும் எதிர்ப்புகள் வந்த நிலையில், இது தொரடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி:

இதற்கிடையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்து மற்ற பல்கலைக்கழகங்கள் தேர்ச்சி வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. அதன் படி, தமிழக அரசின் இந்த முடிவை ஏற்று சென்னை பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை முதன் முதலாக தெரிவித்தது.

Madurai Kamaraj University Result
Madurai Kamaraj University Result

இதை தொடர்ந்து, தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. அதன்படி, பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி வழங்கி உள்ளது. அரியர் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

Bharathidasan University Result
Bharathidasan University Result

Check Kamaraj University Arrear Result 

Check Bharathidasan University Arrear Result

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here