All India Radio வில் வேலைவாய்ப்பு 2020

0
All India Radio வில் வேலைவாய்ப்பு 2020
All India Radio வில் வேலைவாய்ப்பு 2020

All India Radio வில் வேலைவாய்ப்பு 2020

பிரசார் பாரதி (Prasar Bharati) ஆல் இந்தியா ரேடியோவில் நிருபர் பணிக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிபேட்டை, செங்கல்பட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆல் இந்தியா ரேடியோவில் நிருபர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 20 நாட்களுக்குள்ளாக (அதாவது 17 மார்ச் 2020) அனுப்ப வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 24 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த மாவட்ட, நகரத்தில் இருக்கும் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில் இருந்து, 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள், இதழியல் (Journalism / Mass Media) துறையில் முதுநிலை டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், இதழியல் துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.newsonair.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, அறிவிப்பு வெளியானதில் இருந்து 20 நாட்களுக்குள்ளாக (அதாவது 17 மார்ச் 2020) அனுப்ப வேண்டும்.

முகவரி:

Station Director,
All India Radio,
Kamarajar Salai, Mylapore,
Chennai – 600 004

Official Website
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!