தடுப்பூசி போடவில்லை என்றால் பணியினை நிறுத்துவோம் – விமானிகள் சங்கம் எச்சரிக்கை!!

0
தடுப்பூசி போடவில்லை என்றால் பணியினை நிறுத்துவோம் - விமானிகள் சங்கம் எச்சரிக்கை!!
தடுப்பூசி போடவில்லை என்றால் பணியினை நிறுத்துவோம் - விமானிகள் சங்கம் எச்சரிக்கை!!

தங்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றால் பணியினை நிறுத்த நேரிடும் என்று இந்திய விமானிகள் சங்கம் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியாக இருக்க, அனைத்து இந்திய விமானிகள் சங்கம் தற்போது ஒரு எச்சரிக்கையை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அது, வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியாளர்களுக்கும், நிர்வாக பணிகளில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், முன்களத்தில் நின்று சேவை ஆற்றும் பறக்கும் குழுவினருக்கு தடுப்பூசிகள் இன்னும் போடப்படவில்லை. இது அவர்களையும் அவர்களது பணியினையும் கேலி செய்வது போல உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அவர்களுக்கு தடுப்பூசி போடப்படாத காரணத்தால், பலரும் கொரோனா நோய் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் அவர்களது குடும்பமும் பாதிப்பினை சந்தித்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு வேண்டும். வந்தே மாதரம் மிஷன் மூலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெற்று வருகின்றது. ஆனாலும், ஊதியகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசாணை வெளியீடு!!

ஏர் இந்தியா 18 வயதுக்கு மேற்பட்ட பறக்கும் குழுவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்களை இந்திய அளவில் அமைக்காவிட்டால் பணியை தாங்கள் நிறுத்த போவதாக அனைத்து இந்திய விமானிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here