தமிழக திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

0
தமிழக திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
தமிழக திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
தமிழக திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அன்னதானத் திட்டம்

தமிழகத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கையின் போதும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மீதான விவாதத்தின் போது 165 அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 5 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் அமைச்சர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் செயல்படுத்த உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் – கொரோனா பாதிப்பு எதிரொலி!

இதனை தொடர்ந்து தமிழகத்தில் 10 திருக்கோயில்களில் கோவிலுக்கு வருகை புரியும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இந்த வருடத்திற்குள் மேலும் 5 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதே போல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அக்கோவில்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here