ஐலாவை ஸ்கூலில் சேர்க்க திட்டமிடும் ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
ஐலாவை ஸ்கூலில் சேர்க்க திட்டமிடும் ஆலியா மானசா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐலாவை ஸ்கூலில் சேர்க்க திட்டமிடும் ஆலியா மானசா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐலாவை ஸ்கூலில் சேர்க்க திட்டமிடும் ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் அதிர்ச்சி!

சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலில் விழுந்த சஞ்சீவ் ஆலியா ஜோடியின் மகள் ஐலா சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாக இருக்கிறார். இந்நிலையில் ஆலியாவிற்கு இரண்டாவது மகன் வந்துவிட்டதால் ஐலாவை ஸ்கூலில் சேர்க்க இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆலியா மானசா:

சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் இருக்கின்றனர். குடும்ப கதைகளை மையமாக வைத்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தங்களது குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இருவருக்கும் நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரைக்கு வந்தவர்கள்.

தமிழகத்தில் நாளை (மே 13) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற மகள் பிறந்தாள். ஐலா பிறந்த அன்று முதல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறாள். அவளுடைய அழகான சிரிப்பிற்கு, சுட்டித்தனமான நடவடிக்கைகளையும் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஆலியா தனியாக யூடுயூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் தனது குழந்தைகள் பற்றி பல வீடியோக்களை அவர் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது ஐலாவை ஸ்கூல் சேர்க்க வேண்டும் என வீடியோ பதிவிட்டுள்ளார். 2 வயது தான் ஆகிறது என சஞ்சீவ் சொல்ல, இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை என ஆலியா சொல்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ஐலா பாவம் ஸ்கூல் சேர்க்க வேண்டாம் என பலர் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!