தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆலியா – வைரலாகும் புகைப்படம்!

0
தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆலியா - வைரலாகும் புகைப்படம்!
தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆலியா - வைரலாகும் புகைப்படம்!
தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆலியா – வைரலாகும் புகைப்படம்!

சின்னத்திரையில் டாப் ஜோடியாக இருக்கும் சஞ்சீவ் ஆலியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் தனது கணவர் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஆலியா சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

சஞ்சீவ் ஆலியா ஜோடி:

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின் ரியல் ஜோடியாக கலக்கி வருபவர்கள் சஞ்சீவ் ஆலியா ஜோடி. இந்த ஜோடிக்கு திருமணம் முடிந்து ஐலா என்ற மகள் இருக்கும் நிலையில் ஆலியா விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நிலையில் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் அர்ஷ் என்ற மகன் பிறந்திருக்கிறான்.

Exams Daily Mobile App Download

சீரியலை விட்டு ஆலியா இடைவெளி எடுத்துக் கொண்டாலும் ஆலியா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். ஆலியா சஞ்சீவ் இணைந்து தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் குழந்தைகளை பற்றி ஏகப்பட்ட வீடியோக்களை அவர்கள் பதிவிடுவார்கள். சமீபத்தில் கூட ஐலாவை ஸ்கூலில் சேர்த்த வீடியோ ஒன்றை ஆலியா வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் சஞ்சீவ் ஆலியா சீரியலில் நடிக்கும் போது அடிக்கடி படப்பிடிப்பிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

ராதிகாவை திருமணம் செய்வேன் என உறுதியாக சொன்ன கோபி, மறுக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அந்த வகையில் ஆலியா சஞ்சீவ் நடித்து வரும் சீரியல் படப்பிடிப்பிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சஞ்சீவ் தற்போது சன் டிவி கயல் சீரியலில் நடித்து வருகிறார். கயலின் தங்கையின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் ஆலியா படப்பிடிப்பிற்கு ஐலா உடன் சென்று அங்கே புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டுள்ளார். அதில் கயல் சீரியல் நடிகர்கள் அழகாக போஸ் கொடுத்து இருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!